நண்பருடன் வந்த மாணவி…! தவறாக தொட்டு 20 நிமிடம் சித்திரவதை செய்த கும்பல்… பயந்த குடும்பத்தினர்…. வைரல் வீடியோவால் ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2026

Spread the love

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில், 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை ஒரு கும்பல் சாலையில் வழிமறித்து, தவறாகத் தொட்டு இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த செப்டம்பர் 19 அன்று, பயிற்சி வகுப்பு முடிந்து தனது நண்பனுடன் ஸ்கூட்டரில் திரும்பி வந்த மாணவியை ஒரு கும்பல் வழிமறித்து, உடன் வந்த சிறுவனைத் தனியாகப் பிரித்துவிட்டு, மாணவியைச் சூழ்ந்துகொண்டு சுமார் 20 நிமிடங்கள் இவ்வாறு துன்புறுத்தியுள்ளது. அங்கிருந்த சிலர் காப்பாற்ற முயன்றும் அக்கூட்டம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

   

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பயம் காரணமாக முதலில் புகார் அளிக்காத நிலையில், வீடியோக்கள் வைரலானதை அடுத்து ஜமுய் நகர் காவல் நிலைய போலிஸார் உடனடியாகத் தாமாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்துள்ளனர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜமுய் எஸ்.பி. விஷ்வஜித் தயாள் தெரிவித்துள்ளார்.