ஐயோ… யாருடா நீ… ஹெல்மெட் அணிந்து வந்து… கார் மீது வெறித்தன தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

நெலமங்கலாவின் அக்ஷரா கன்ட்ரி லேஅவுட்டில் உள்ள அரிசினகுன்டே பகுதி அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை, அடையாளம்தெரியாத நபர் ஒருவர் கடப்பாரையால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தன்று ஹெல்மெட் அணிந்து கடப்பாரையுடன் வந்த அந்த நபர், காரின் கண்ணாடியை உடைத்து, வாகனத்தை பலமுறை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் சேதமடைந்த கியா ரக கார், பரத் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

   

https://twitter.com/HateDetectors/status/2101945110158364787/video/1

   

இந்த அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து நெலமங்கலா நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.