பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இரவு நேரத்தில் தனிமையான காட்டுப் பகுதிக்குச் சென்று நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த காதல் ஜோடியை, அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த காடையர்கள், இளம் பெண்ணிடம் மிகவும் அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடந்து கொண்டதோடு, அவரது உடலை அத்துமீறித் தொட்டுத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர், பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஓட முயன்றபோது, அப்பெண் கடுமையாகப் போராடித் தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஜமுய் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஸ்வஜித் தயாள் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
