மும்பையின் கடலோரச் சாலையில் அதிகாலையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் மோதி, காற்றில் பலமுறை தலைகீழாகப் புரண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடல் வழியிலிருந்து ஹாஜி அலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த சொகுசு கார், அளவுக்கு அதிகமான வேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை இடித்து நொறுக்கிக் கொண்டு மேம்பாலத்திலிருந்து கீழே பாய்ந்தது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
