முழு கதையும் இதில் இல்லை… “சிகிச்சை அளிக்க மறுத்த பெண் மருத்துவர்…?” இணையத்தில் வைரலாகும் 16 விநாடி வீடியோ…! மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் அம்பா அரசு சிவில் மருத்துவமனையில், பைக் விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டு, பெண் மருத்துவர் ஆர்த்தி தண்டோதியா என்பவர் இருக்கையை விட்டு எழுந்து செல்லும் 16 விநாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், “அந்த வீடியோவில் முழுமையான உண்மை இடம்பெறவில்லை. விபத்தில் காயமடைந்த மூன்று நோயாளிகளுக்கும் வீடியோ எடுக்கப்படுவதற்கு முன்பே மருத்துவர் ஆர்த்தி சிகிச்சை அளித்துவிட்டார். அதன் பின்னரே உறவினர்களுக்கும் மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

   

இச்சம்பவம் குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் மருத்துவரின் கோபமான நடத்தையைக் கண்டித்து வரும் நிலையில், பெரும்பாலான பயனாளர்கள், நோயாளிகளின் உறவினர்களின் தவறான நடத்தையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே பெண் மருத்துவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்றும், அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.