“இரட்டை இலையும் விசிலும் ஒன்னுதான்”…. 35% வாக்கு வங்கி தவெக கைக்கு போயிடுச்சு…. எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த மரண அடி… ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு….!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 2012 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக டெல்லியை எதிர்த்து நேருக்கு நேர் நிற்கும் துணிச்சலோடு செயல்பட்டதாகக் குறிப்பிட்டார. ஆனால், தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஊழல் மற்றும் பயத்தின் காரணமாக திமுகவிற்கு அஞ்சி ஒளிந்து கொள்வதாகவும், இது உண்மையான அதிமுகவே அல்ல என்றும் கடுமையாக விமர்சித்தார். பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரைத் தலைவர்களாக ஏற்று மதுரையில் மாநாடு நடத்தியபோதே உண்மையான அதிமுக உருவானதாக அவர் சுட்டிக்காட்டினார்.

   

அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் விசுவாசிகளும் திமுகவை எதிர்ப்பதற்குச் சரியான கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்பதை உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே தவெக 35 சதவீத வாக்கு வங்கியை எட்டி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி தற்போது முழுமையாகத் தவெகவுடன் இணைந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

   

சட்டமன்றத்தில் திமுகவை எதிர்த்துப் பேசத் தவறும் அதிமுக, தன் சொந்த நலனுக்காக திமுகவுடன் ஒரே நேர்கோட்டில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மக்கள் மற்றும் தொண்டர்கள் தற்போது தெளிவடைந்து விட்டதால், இனி வரும் காலங்களில் அதிமுகவிற்கு என்று தனியாக வாக்குகள் எதுவும் இருக்காது என்றும், “இரட்டை இலையும் விசிலும் ஒன்றுதான்” என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டதாகவும் அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.