“தம்பி… இங்க வைக்காதப்பா…” போனை வைத்து பாடம் புகட்டிய போலீஸ்… வாலிபரின் ரகளையால் ரயிலில் பளார்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

ரயில் பயணத்தின் போது நபர் ஒருவர் தனது கைபேசியைச் சார்ஜரில் போட்டுவிட்டு, அதனருகே இருக்காமல் தூரமாகச் சென்றுள்ளார். இதைப் பார்த்த போலிஸ் அதிகாரி ஒருவர், ரயில்களில் போன் திருட்டு அதிகம் நடப்பதால் போன் அருகிலேயே இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

ஆனால், அந்தப் பயணி போலிஸின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் போனை விட்டு விலகிச் சென்றுள்ளார். இதனால் அவருக்குப் பாடம் புகட்ட நினைத்த போலிஸ் அதிகாரி, அந்த போனை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த பயணி போன் இல்லாததைக் கண்டு, மற்றொருவரின் மொபைலில் இருந்து தனது போனுக்கு அழைத்துள்ளார். அப்போது போன் அருகிலேயே அடிப்பதை உணர்ந்து கூச்சல் போட்டுப் ரகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

   

இதனால் பொறுமையிழந்த அந்தப் போலிஸ் அதிகாரி, எச்சரிக்கையை மீறி அலட்சியமாக இருந்ததற்காகவும் தேவையின்றி கூச்சல் போட்டதற்காகவும் அந்த நபரை அறைந்துள்ளார். இச்சம்பவம் குறித்த பதிவு தற்போது எக்ஸ் தளத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.