“முதலமைச்சராக இருக்கும் என் அப்பாவுக்கு…” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்… சிக்மா டிரெய்லர் விழாவில் உருக்கமான பேச்சு…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள ‘சிக்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சமீபகாலமாக விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளில் ஜேசன் சஞ்சய் தாய் பக்கம் நின்றதாகவும், இதனால் விஜய்யுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு அப்பாவிடம் வாய்ப்பு கேட்காமல் தனியாகச் சென்றுவிட்டதாகவும் பலவிதமான வதந்திகள் பரவி வந்தன. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘சிக்மா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், “எனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்ய அப்பா தயாராகத்தான் இருந்தார். ‘உனக்கு என்ன வேண்டும் என்று நீயே முடிவு செய்துவிட்டு வந்து கேள், செய்கிறேன்’ என்று கூறியிருந்தார்” எனத் தெளிவுபடுத்தினார்.

   

மேலும், “என் தாய் சங்கீதாவிற்கு நன்றி, இன்று முதலமைச்சராக இருக்கும் என் தந்தை விஜய்க்கும் நன்றி” என ஒரே மேடையில் இருவரையும் நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். அப்பா அரசியல் களம் கண்டுள்ள நிலையில், மகன் இயக்குநராகக் களமிறங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.