“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர், கடந்த சில மாதங்களாகத் தனக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படாததால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாணவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள பிரபல இயக்குநர் போஸ் வெங்கட், “கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் எம்.எல்.ஏ-வுக்கு லட்சக்கணக்கில் கார் வாங்கிக் கொடுக்கும் அரசு, ஏழை மாணவனின் கல்வி உதவித்தொகைக்குக் கணக்குப் பார்ப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒரு தலித் மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த விடுவதற்கா ஆட்சியில் பங்கு கேட்டீர்கள் திருமா அண்ணே?” எனக் காரசாரமாகப் பொங்கியுள்ளார்.

   

இதனிடையே, மாணவரின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு மாறானது எனத் தமிழகச் சமூக நீதித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. அந்த மாணவருக்கு ஏற்கனவே ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள ரூ.19.50 லட்சம் செலவினம் குறித்துப் பல்கலைக்கழகத்திடமிருந்து பதில் வந்தவுடன் உடனடியாக நிதி விடுவிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.