“நீ எவன் கூட போனில் பேசுற…?” தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையை துண்டித்த கணவன்..! 12 ஆண்டு திருமண வாழ்க்கை… நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இஸ்லாம்நகர் திலியா பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வந்த பர்வேஸ் என்பவன், செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த தனது 28 வயது மனைவி நக்மாவை கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கியுள்ளான்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இந்த தம்பதியினரிடையே, நக்மா போனில் வேறொரு ஆணுடன் பேசுவதாகப் பர்வேஸிற்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் எழுந்த தகராறில், நக்மா தூங்கிக் கொண்டிருந்த போது பர்வேஸ் அவரைக் கத்தியால் பலமுறை குத்தியும் வெட்டியும், இறுதியில் அவரது தலையைத் தனியாகத் துண்டித்தும் கொடூர கொலை செய்துள்ளார்.

   

நக்மா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில், கொலையாளி பர்வேஸ் தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தான். “தனது மகளைக் கணவனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தனர்” என நக்மாவின் தாய் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலிஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.