ஐயோ… 10 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மனைவி… கதறி அழுத கணவர்… பல மணி நேரப் போராட்டத்திற்கு… பின் சிக்கிய பைக்கர்… அகமதாபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 17, 2026

Spread the love

அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில் அதிவேகமாக வந்த பல்சர் பைக் மோதியதில், பெண் ஒருவர் சுமார் 10 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்த துயரம் தாங்காமல் அவரது கணவர் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போபல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விபத்து நடந்தவுடன் குற்றவாளி தனது பைக்கை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். முதலில் மருத்துவமனைக்கும், பின்னர் நண்பரின் வீட்டிற்கும் சென்ற அவர், அங்கிருந்து ராஜஸ்தானில் உள்ள துங்கர்பூருக்குத் தப்பிச் சென்றார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

   

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள், கைவிடப்பட்ட பைக் மற்றும் குற்றவாளியின் பணி தொடர்பான நபர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவல்துறை விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. இறுதியில், விபத்து நடந்து 96 மணி நேரத்திற்குப் பிறகு, ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போபல் காவல்துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்தனர்.