குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அகமதாபாத் நகரத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், அகமதாபாத்தில் நெஞ்சை பதறவைக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளம் சூழ்ந்த தெருக்களில், ஆபத்தான சூழலிலும் ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு நோயாளியை கைகளில் சுமந்தபடி, இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த இதயத்தை பிழியும் வீடியோ காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DdS4gLJCaO1/?utm_source=ig_web_button_share_sheet
முறையான உள்கட்டமைப்பு மற்றும் அவசரக்கால மீட்பு உதவிகள் கிடைக்காத நிலையிலேயே அக்குடும்பத்தினர் இத்தகைய கடினமான முடிவை எடுக்க நேரிட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வெள்ள பாதிப்பு காலங்களில் நகர்ப்புற அவசர மருத்துவச் சேவைகள் மற்றும் வடிகால் அமைப்புகளின் குறைபாடுகளை இச்சம்பவம் தோலுரித்துக் காட்டியுள்ளதாகக் கூறி, இணையவாசிகள் தங்களது கண்டனங்களையும் கவலைகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
