போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவருடன் தன்னைத் தொடர்புப்படுத்தி, அமலாக்கத்துறையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளமான ‘X’-இல் பதிவிட்ட ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த அவதூறு பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மனு தொடர்பாகப் பதிலளிக்க மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
