என்னடா கொடுமை இது… ஏழைக்கு ஒரு நீதி?… எம்.பி மகனுக்கு ஒரு நீதியா?… போலீஸின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசென்கள்… தெலங்கானாவில் பரபரப்பு…!!

By Swetha on புரட்டாதி 15, 2026

Spread the love

அமீர்பேட்டையில் ராபிடோ பைக்கில் சென்ற ஹேமதுர்கா என்ற பெண் RTC பஸ் மோதி உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் பன்ஜகட்டா காவல்துறை சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, ஓட்டுநர் ஷேக் அன்வரை கைது செய்து நடவடிக்கை எடுத்தது.

ஆனால், இன்ஆர்பிட் மால் அருகே அஸ்டன் மார்ட்டின் காரில் பாரதி முகி என்ற பெண் மோதி பலியான வழக்கில், ஜனசேனா எம்.பி லிங்கமனேனி ரமேஷின் மகன் சஞ்சுஷ் மீது காவல்துறை இதுவரை கைது நடவடிக்கை எடுக்காமல் நோட்டீஸ் மட்டுமே வழங்கியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

   

ஏழைகளுக்கோ உடனடி கைது, அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கோ பாதுகாப்பு என்று சட்டம் இருவேறாகச் செயல்படுகிறதா என்றும், இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளை வெளியிடாமல் மறைப்பது ஏன் என்றும் நெட்டிசன்களும் சமூக ஆர்வலர்களும் தெலுங்கானா காவல்துறையின் நடவடிக்கையைக் கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.