திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கான அரசியல் எதிர்காலம் தற்போதைய சூழலில் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தவெகவில் இணைவதே சரியான நகர்வாக இருக்கும் என ரவீந்திரநாத் தனது தந்தைக்குத் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகிறாராம்.
இருப்பினும், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனவும், தற்போதைய அரசியல் சூழலில் சிறிது காலம் பொறுத்திருந்து நிலைமையை உற்றுநோக்குமாறு கூறி ரவீந்திரநாத்தை OPS சமாதானப்படுத்தி வைத்திருப்பதாக தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
