“வாயை மூடுங்க”…. ஆ.ராசாவுக்கே “நா காக்க” ஆப்பு வைச்ச கனிமொழி…. எக்ஸ் (X) தளத்தில் போட்ட அந்த ஒற்றை குறள்…. கொதித்தெழும் அரசியல் களம்….!

By Nanthini on புரட்டாதி 13, 2026

Spread the love

அரசியல் மேடைகளிலும் பொதுவெளியிலும் பயன்படுத்தப்படும் நாகரிகமற்ற பேச்சுகளும், தனிநபர் தாக்குதல்களும் சமீபகாலமாகத் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளன. ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, கண்ணியமான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாக ஆபாசமான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சில மூத்த அரசியல் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கோபத்தின் எல்லையில் எல்லை மீறிப் பேசுவது, ஒட்டுமொத்த அரசியலின் கண்ணியத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் மிசா காலம் குறித்து எழுந்த காரசாரமான விவாதங்களைத் தொடர்ந்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சில தலைவர்கள் பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ஆ.ராசா எம்.பி மற்றும் சேகர்பாபு போன்றவர்களின் சர்ச்சைக்குரிய மற்றும் காரசாரமான பேச்சுகள் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டு வருகின்றன. அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் பேசும்போது நிதானத்தையும் நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் வலுத்து வருகிறது.

   

இந்தச் சூழலில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருவள்ளுவரின் புகழ்பெற்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. எவராயினும் தன் நாவ அடக்கிப் பேச வேண்டும், இல்லையெனில் சொல் குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர் என்ற பொருளுடைய இக்குறள், தற்போதைய அரசியல் சூழலுக்கு மிகப்பொருத்தமான அறிவுரையாகப் பார்க்கப்படுகிறது. சொந்தக் கட்சியினருக்கே நாகரிகமான பேச்சின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டும் உணர்த்தலாக அமைந்த இந்தப்பதிவு, அரசியல் களத்தில் கண்ணியம் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.