ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மனித மனசாட்சியை உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ராகுல் ஜா என்பவர், இரவில் வீட்டில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் 3 பிஞ்சு மகள்களின் தலைகளைக் கொடூரமாகக் கல்லால் நசுக்கிக் படுகொலை செய்துள்ளார்.
இந்த நாற்கொலையைச் செய்த பிறகு, சிறிதும் சலனமும் பயமும் இன்றி வீட்டில் சாதாரண மனிதனைப் போல நடந்துகொண்டுள்ளார். காலையில் வீட்டிற்கு வந்த பால்காரரிடம் பாலை வாங்கி, தனது முதிய தந்தைக்குத் தானே டீ போட்டுக்கொண்டு போய் கொடுத்துள்ளார். டீயைக் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராகுல் ஜா, அதற்குப் பின் திரும்பவே இல்லை.
சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த தந்தை, ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கிப் பிணமாகக் கிடந்த மருமகள் மற்றும் 3 பேத்திகளைக் கண்டு அலறித் துடித்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிஸார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியையும் 3 மகள்களையும் இரக்கமின்றிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கொடூரன் ராகுல் ஜாவை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
