மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அனைவரையும் உரையவைக்கும் கொடூரமான விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. நர்ஸ் தேர்வு எழுதுவதற்காக மணப்பெண் மரிய வெல்சியாவை, அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஜெப பாஸ்டின் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் சென்ற பைக் மீது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்துக் கட்டுப்பாட்டை இழந்து கொடூரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணப்பெண் மரிய வெல்சியா, மணமகன் ஜெப பாஸ்டினின் கண்முன்னேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மணமகன் ஜெப பாஸ்டின் தற்போது உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமணக் கோலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வீட்டில், மணப்பெண்ணின் விபத்து மரணத்தால் உறவினர்கள் கதறித் துடிக்கும் காட்சி அப்பகுதியினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
