மனைவி ஒருவர் தனது கணவருக்குத் தெரியாமல் சிறுகச் சிறுக சுமார் ரூ.12,000 பணத்தை சேர்த்து வைத்துள்ளார். சுமார் 7 மாத கால சேமிப்பிற்குப் பிறகு, கணவனுக்கு ஆச்சரியம் அளிப்பதற்காக அந்தப் பணத்தை அவர் பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து வெளியே எடுத்துள்ளார்.
ஆனால், அந்தப் பணப் பையைத் திறந்த கணவனுக்கும் மனைவிக்கும் காத்திருந்தது பேரதிர்ச்சி! அவர்கள் ஆசையாகச் சேர்த்து வைத்திருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும் கரையான் கொடூரமாக அரித்து நாசமாக்கியிருந்தது. கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்த பணம் கண்ணெதிரே செல்லாத நிலைக்குப் போனதைக் கண்டு இருவரும் திகைத்துப்போயினர்.
இந்தச் சம்பவம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், “பெண்கள் பணம் சேமிப்பது நல்ல பழக்கம் தான், ஆனால் அதைச் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் கரையான் விருந்தாக்கிவிடும்” என விழிப்புணர்வுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
