உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து அயோத்திக்கு உமா சங்கர் என்பவர் தனது மனைவியுடன் புல்லட் பைக்கில் பயணித்து கொண்டிருந்தார். வழியில் அவரது மனைவி, “இன்று ஒருநாள் நான் புல்லட் பைக்கை ஓட்டுகிறேன்” என ஆசையாகக் கேட்டுள்ளார். மனைவியின் ஆசைக்குத் தலைவணங்கிய கணவன், பைக்கை ஓட்டக் கொடுத்துவிட்டு பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார்.
சிறிது தூரம் சென்றதும், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல மனைவி முயன்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உரைய வைக்கும் வகையில் 15 அடி ஆழமுள்ள சாரதா கால்வாய்க்குள் பாய்ந்தது. பைக் மற்றும் தம்பதியினர் நீரில் மூழ்கியதைக் கண்ட வழியில் சென்ற பொதுமக்கள், உடனடியாகக் கால்வாயில் குதித்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய தம்பதியினர், நனைந்த ஆடைகளுடன் ஒருவரையொருவர் கட்டியணைத்து அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
