சென்னை கோயம்பேட்டில் துணை நடிகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அவரை கத்தியால் வெட்டித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த துணை நடிகர் வீட்டின் கதவை மர்ம நபர்கள் திடீரெனத் தட்டியுள்ளனர். கதவைத் திறந்ததும், உள்ளே துணிச்சலாகப் புகுந்த அக்கும்பல், அவரிடம் தகராறில் ஈடுபட்டுத் திடீரெனத் தங்களிடம் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த அந்த துணை நடிகர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் பணப் பிரச்சினையா என்ற கோணத்தில் கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
