இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குப் புதிய அரசியல் சவால்கள் எழுந்துள்ளன. ஒருபுறம் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நிலவினாலும், கம்யூனிஸ்ட்கள் இந்த கூட்டணியில் இணைய விரும்பவில்லை என்பது விஜய்க்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மற்றொருபுறம், ஏற்கெனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பதா அல்லது களத்தில் புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதா என்ற குழப்பமும் தலைமையகத்தில் நீடிக்கிறது. இதனால், கூட்டணிச் சூழலைச் சமாளிப்பதோடு உட்கட்சிப் பூசல்கள் வராமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய இரட்டைச் சிக்கலில் முதலமைச்சர் வேட்பாளராகப் பார்க்கப்படும் விஜய் தவித்து வருகிறார்.
