“என்ன மனுஷன்யா இவரு”…. தர்ணா செய்த திமுக எம்.எல்.ஏ-வுக்கு கை கொடுத்து தூக்கிய முதல்வர் விஜய்…. சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்யம்…!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக அரசு மீதான அமலாக்கத்துறையின் பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு ஆவேசமாகப் பேசினார். சர்க்காரியா கமிஷன், வீராணம் திட்டம், டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் கரூர் கேங் விவகாரம் முதல் மிசா காலம் வரையிலான நிகழ்வுகளைத் தொட்டுப் பேசிய அவர், கட்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட தொகைகள் நேரடியாக மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்குச் சென்றதாக அமலாக்கத்துறை கூறியிருப்பதாகக் குற்றம்சாட்டினார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதிலளிக்க வாய்ப்பு கேட்க முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோரிக்கை மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்தச் சலசலப்புக்கு நடுவே, முதலமைச்சர் விஜய்க்கு அருகே நின்று தர்ணாவில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தரையிலிருந்து எழ முயன்றபோது நிலைகுலைந்து தடுமாறினார். இதைக் கவனித்த முதலமைச்சர் விஜய், உடனே சலசலப்புகளை மறந்து, அவரது கையைப் பிடித்துத் தூக்கிவிட்டு உதவினார். மேலும், அவர்கள் சிரமமின்றி தர்ணா செய்ய ஏதுவாகத் தனது இருக்கை மேஜையைக் சற்று பின்னுக்குத் தள்ளி வழி ஏற்படுத்திக் கொடுத்தார். முதலமைச்சரின் இந்த கனிவான செயல், அரசியல் ரீதியிலான மோதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதநேயப் பண்பாக அவையில் இருந்த அனைவரையும் கவனிக்க வைத்தது.

   

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே துரை சந்திரசேகரன் தான், சட்டசபையில் முதலமைச்சர் விஜய் குறித்து கிண்டலான முகபாவனைகளைச் செய்து காட்டியவராகவும், அமைச்சர் கீர்த்தனாவை மரியாதையின்றிப் பேசியவராகவும் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை எதிர்த்து அமளி செய்யும் அதே நபர் தடுமாறியபோது, பழைய கசப்புகளை மனதில் கொள்ளாமல் முதலமைச்சர் விஜய் காட்டிய இந்த மனிதநேயப் பண்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “அரசியல் எதிர்ப்பை மீறிய மாண்பு… என்ன மனுஷன்யா!” என தவெக ஆதரவாளர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் முதலமைச்சரின் இந்த செயலைப் பாராட்டிப் பதிவிட்டு வருகிறார்கள்.