ஐயோ கடவுளே… வகுப்பறையில் புகுந்து சக மாணவர்களை… வெறித்தனமாக கத்தியால் தாக்கிய 14 வயது சிறுவன்… வியட்நாமில் பேரதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

வியட்நாமில் உள்ள பள்ளி ஒன்றில் 14 வயது மாணவன் ஒருவன் தன் சக மாணவர்களை எதிர்பாராதவிதமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை நடத்திய ‘ஹாங் டாங் காங் பாங்’ என்ற மாணவன், கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளியில் சக மாணவர்கள் தன்னைத் தொடர்ந்து கேலி செய்து சித்திரவதை செய்து வந்ததாகக் கூறியுள்ளான். இதன் காரணமாகவே அவர்களுக்குப் பாடம் புகட்ட, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவன் தெரிவித்துள்ளான்.

   

https://twitter.com/AlertaMundoNews/status/2096440607472226572/video/1

   

இருப்பினும், இச்சம்பவம் குறித்து வியட்நாம் அரசு மற்றும் அந்நாட்டு ஊடகங்கள் கடுமையான ரகசியத்தைக் காத்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பெரும்பாலான செய்திகளும் பதிவுகளும் வியட்நாம் கணக்குகளிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இதனால் இச்சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் வெளிவராமல் மறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.