“அழகான பொண்ணு… ஆனா அந்த ஒரு விஷயம்…” ஒரே வார்த்தையால் நின்ற திருமணம்… சோஷியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரியும் விவாதம்…!

By Devi Ramu on புரட்டாதி 7, 2026

Spread the love

ரோஹித் என்ற வாலிபருக்குப் பெண் பார்க்க அவனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அந்தப் பெண் மிகவும் அழகாகவும், பண்பானவராகவும் இருந்ததால், வாலிபரின் குடும்பத்தினர் உடனடியாகத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து வரனை உறுதி செய்துள்ளனர்.

வீட்டிற்குத் திரும்பிய பிறகு, அந்தப் பெண் வாலிபருக்குப் போன் செய்து, “உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன்… நான் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் செய்வேன்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், “எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்” என உடனடியாகத் திருமணத்தை நிராகரித்து ரத்து செய்துள்ளார்.

   

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்கிறார் என்பதற்காகவே நிச்சயமான திருமணம் நின்றுபோன இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “ரீல்ஸ் செய்வதில் என்ன தவறு இருக்கிறது, பெண் உண்மையைப் பேசியுள்ளார்” எனச் சிலர் ஆதரித்தும், “குடும்ப வாழ்க்கைக்கும் கண்ணியத்திற்கும் ரீல்ஸ் மோகம் ஒத்து வராது, இளைஞரின் முடிவு சரியே” எனச் சிலர் ஆதரவாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.