விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி துணைச் செயலாளர் ஷானு ஹனீஃப் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எக்ஸ் எம்.எல்.ஏ பனையூர் பாபுவை திமுகவில் இணைத்துக் கொண்டபோதே கட்சித் தலைமை மீது தொல். திருமாவளவன் தனது பகிரங்க அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் முக்கிய நிர்வாகிகளை திமுக தன் பக்கம் வளைத்திருப்பது அவரை கடும் அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்துடன் விசிக மறைமுகக் கூட்டணி அல்லது சுமுக உறவு பேணுவது தங்களுக்குப் பிடிக்காமலேயே, இவர்கள் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சலசலப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
