ஷாக்… சென்னைக்கு வெளிப்பக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்?… முதல்வர் விஜய்யின் ‘லெகசி’ பிளானை… மாற்றிய ஐ.நா அதிகாரி… அரசியலில் பரபரப்பு…!

By Swetha on புரட்டாதி 6, 2026

Spread the love

புதிய தலைமைச் செயலகம் அமைப்பது காலத்தின் கட்டாயம் என்றும், தற்போதைய தலைமைச் செயலக வளாகம் கடும் இட நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் ஐ.நா. முன்னாள் அதிகாரி ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைக்கு 2.07 லட்சம் சதுர அடியும், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 3.75 லட்சம் சதுர அடியும் மட்டுமே உள்ளன. 6,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், வாகனங்களை நிறுத்தக் கூட இடமில்லாமல் கோட்டை வளாகம் திணறி வருகிறது. மக்கள் தொகையும் தேவைகளும் இரட்டிப்பாகிவிட்ட சூழலில், 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடியில் ஒருங்கிணைந்த தலைமைச் செயலகத்தைக் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையிலேயே கிண்டி, பட்டினம்பாக்கம் அல்லது நந்தம்பாக்கம் ஆகிய இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், இது நகரின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், பிரேசில் நாடு தனது தலைநகரை ரியோ-டி-ஜெனிரோவில் இருந்து பிரேசிலியாவிற்கு மாற்றியது போல, சென்னையின் நெரிசலைக் குறைக்க திருமழிசை போன்ற நகருக்கு வெளியேயுள்ள பகுதிகளைத் தேர்வு செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்று கண்ணன் யோசனை தெரிவித்துள்ளார். அதேவேளையில், திருச்சிக்குத் தலைநகரை மாற்றினால் ஊழியர்கள் குடும்பத்துடன் இடம்பெயர்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடியைத் தாண்டிவிட்ட நிலையில், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பரவலான வளர்ச்சியை நோக்கிய முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தனது ஆட்சியின் முக்கிய அடையாளமாகவும், வரலாற்றுச் சாதனையாகவும் இந்த ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை விட்டுச்செல்ல விரும்புகிறார் என்றும், அதற்கான இடத்தேர்வுப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.