அம்மாடியோ… கையில் போன் இல்லை… காதலனுக்காக வீட்டிலிருந்து தப்பி ஓடி… 5 ரயில்கள் ஏறி 1020 கி.மீ பாய்ந்த காதலி… அடுத்து காதலன் வீட்டில் நடந்த சம்பவம்… இணையத்தில் வைரல்…!

By Swetha on புரட்டாதி 6, 2026

Spread the love

ஜார்ஜ்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2022-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் வாயிலாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருடன் பழகத் தொடங்கினார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. காதலன் அடிக்கடி ஜார்ஜ்கண்ட் சென்று தன் காதலியைச் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் தந்தை அவரிடமிருந்த செல்போனைப் பறித்ததால், தோழியின் போன் மூலமாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். பின்னர், காதலன் நேரில் சென்று புதிய போன் வாங்கிக் கொடுத்தபோதிலும், அதுவும் வீட்டில் சிக்கியதால் அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தொடர்ந்து எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் அதிகரித்ததால், அந்தப் பெண் தன் காதலனை அடைவதெனத் தீவிரமாக முடிவெடுத்தார். கையிலும்கூட செல்போன் இல்லாத நிலையிலும், காதலனின் வீட்டு முகவரியை மட்டுமே நம்பிக்கையாகக் கொண்டு ஜார்ஜ்கண்டிலிருந்து புறப்பட்டார். வழியில் 5 ரயில்களை மாற்றி மாற்றி ஏறி, சுமார் 1020 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இறுதியில் மத்திய பிரதேசத்தில் உள்ள தன் காதலனின் வீட்டை வெற்றிகரமாகச் சென்றடைந்தார்.

   

காதலியின் இந்தத் துணிச்சலான முயற்சியைக் கண்ட காதலனும் அவரது குடும்பத்தினரும் அவரை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அருகிலிருந்த ஒரு கோவிலில் வைத்து இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, பெண்ணின் வீட்டாடமிருந்து நேரக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி, காதல் ஜோடியினர் இருவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகிப் பாதுகாப்பு கோரியுள்ளனர்.