அம்மாடியோ… 2 நிமிட பார்க்கிங்க்கு… ரூ23,000 அபராதமா?… அமெரிக்காவில் கதறும் இந்தியர்கள்… இணையத்தில் ஷாக்கிங் பதிவு…!

By Swetha on புரட்டாதி 5, 2026

Spread the love

50 என்பது ஒருமுறை விதிக்கப்படும் நிலையான அபராதம் என்பதால், நேரத்திற்கு ஏற்ப அது அதிகரிக்காது. 2 நிமிடத்திற்கு 50 அபராதம் என்றால், 10 நிமிடங்கள் காரை நிறுத்தினாலும் அபராதத் தொகை அதே 50 ஆகத்தான் இருக்கும்; அது $250 ஆகப் பெருக்கமடையாது.

அமெரிக்காவில் தெருவோரப் போக்குவரத்து மற்றும் பார்க்கிங் விதிகள் மிகவும் கடுமையான முறையில் பின்பற்றப்படுகின்றன. மஞ்சள் கோடு போடப்பட்ட இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இடங்கள் அல்லது பார்க்கிங் செய்யத் தடைசெய்யப்பட்டப் பகுதிகளில் காரை நிறுத்தினால், சில நிமிடங்களிலேயே போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் அபராதச் சீட்டை காரின் கண்ணாடியில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அங்கு விதிகளை மீறுவது சட்டப்படி பெரிய குற்றமாகக் கருதப்படுவதால், ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்கள்.

   

இந்தியாவில் “2 நிமிஷம் தானே நிறுத்தினேன்” என்று சாதாரணமாகக் கூறித் தப்பிக்கும் வழக்கம் பலரிடமும் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் விதிமீறல் என்பது நேரத்தைப் பொறுத்தது அல்ல; விதி மீறப்பட்டதா இல்லையா என்பது மட்டுமே பார்க்கப்படுகிறது. எனவே, ரூ 23,000 அபராதம் என்ற கணக்கு தவறானது என்றாலும், அமெரிக்காவில் ஒரு சிறிய கவனக்குறைவு கூட உடனடியாகக் கணிசமானப் பண இழப்பை ஏற்படுத்தும் என்பது முற்றிலும் உண்மை.