தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேகர் மற்றும் அமுதா தம்பதியரின் மூத்த மகளான கலைசெல்வி என்ற சவிதா (19), ஏலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த தனது இளைய தங்கைகளை அழைத்து வருவதற்காக வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அவர்களுடன் சென்ற 11-ஆம் வகுப்பு மாணவியான நிவேதா (17) மற்றும் 13 வயதான தனுஸ்ரீ ஆகியோரும் அந்தப் பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது கல்லூரிப் பேருந்து மோதிய இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கண் கலங்க வைத்துள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2095834326806184385/video/1
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் மாணவிகள் விபத்தில் உயிரிழந்த இந்தச் செய்தி ஒட்டுமொத்த கிராமத்தையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், கனரக வாகனங்களால் ஏற்படும் விபடுகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
