அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

By Swetha on புரட்டாதி 4, 2026

Spread the love

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மணிக்கு சுமார் 80 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட அந்த காரில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த கடுமையான மோதலைத் தொடர்ந்து, மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கம்பிகள் சேதமடைந்து நீண்ட நேரமாக பலத்த தீப்பொறிகள் பறந்ததால் அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. உடனடியாகச் செயல்பட்ட அப்பகுதி மக்கள், காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

   

https://twitter.com/prashan02367402/status/2095443350895898643/video/1

   

ஜஹாங்கிராபாத் காவல் நிலையக் குவாட்லி எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த கோர விபத்தின் நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.