ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

By Devi Ramu on புரட்டாதி 4, 2026

Spread the love

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. செய்தித்தாள்களில் வடபாவ் மடிப்பதற்குப் பதில் பட்டர் பேப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை வண்ணங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு, உணவுகள் இயற்கையான நிறத்தில் விற்கப்படுகின்றன.

மேலும், வியாபாரிகள் கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்து சுகாதாரத்தைப் பேணுகின்றனர். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்த அதிரடி மாற்றங்களை விளக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி, 3.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.