ஐயோ பாவம்… வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முயன்ற… சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… தேங்காய் விழுந்து பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…

By Swetha on புரட்டாதி 4, 2026

Spread the love

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கால் தங்களது வீடு நீரில் மூழ்கியதால், குடும்பத்தினருக்காக நிவாரணப் பொருட்களைத் தேடிச் சென்ற 11 வயது சிறுவன் பாதல் பாத்ரா வழியில் எதிர்பாராத விபத்தைச் சந்தித்தான்.

நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய அவனது தலையில், திடீரென ஒரு மரத்திலிருந்து தேங்காய் ஒன்று பலத்த சத்தத்துடன் விழுந்தது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

   

ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவன் உயிரிழந்தான். இயற்கைப் பேரழிவிலிருந்து தப்பிக்க முயன்ற சிறுவன், மற்றொரு விபத்தில் உயிரை இழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.