“என் வீட்டிற்குள் வராதே”…. கத்தியால் குத்தி, கேஸ் சிலிண்டரால் கொடூரத் தாக்குதல்…. முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெங்கடாசலத்தின் மகன்களான ராஜபாண்டியன் மற்றும் ராஜராஜன் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த சொத்து தகராறில், நீதிமன்றம் ராஜராஜனுக்கு சாதகமாக தீர்ப்பளித்து வீட்டை அவருக்கு வழங்க உத்தரவிட்டது.

இதனால் கடுமையான ஆத்திரமடைந்த சகோதரன் ராஜபாண்டியன், ராஜராஜனை கத்தியால் குத்தியதுடன், ஆத்திரம் தீராமல் தலையில் கேஸ் சிலிண்டரால் கொடூரமாகத் தாக்கி சம்பவ இடத்திலேயே படுகொலை செய்துள்ளார். உடன்ப பிறந்த சகோதரனே சொத்து ஆசையால் இந்த எல்லை வரை சென்று உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.