டெல்லி ஜிஜிஎஸ் அரசு மருத்துவமனையில் இருந்து திடீரெனக் காணாமல்போன 3 வயதுக் குழந்தையை, 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் தீவிரமாகத் துரத்திச் சென்று பீகார் மாநிலம் முங்கர் பகுதியில் டெல்லி போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூர் உளவுத்துறை உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை பீகாரில் உள்ள அவரது சொந்தக் கிராமம் வரை சென்று கண்டறிந்தனர். அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டு டெல்லிக்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையைக் கடத்திச் சென்று அநியாயம் செய்த குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வலுத்து வரும் வேளையில், 1,000 கி.மீ தூரம் வரை விரைந்து சென்று குழந்தையை மீட்ட டெல்லி காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
