என் குழந்தையையே தூக்கிட்டுப் போறயா?… கண்முன்னே நடந்த அதிர்ச்சி… தாயின் அதிரடித் துணிச்சலால்… தப்பிய ஒன்றரை வயது பிஞ்சு… மருத்துவமனையில் திடுக்கிடும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 2, 2026

Spread the love

போபாலில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மருத்துவமனை உணவகத்தில் இருந்து ஒன்றரை வயது சிறுவனைக் கடத்திச் சென்று, அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் உடனடியாக அந்த நபரைக் கண்டுபிடித்து, பொதுமக்களின் உதவியுடன் தனது குழந்தையை மீட்டார். சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

   

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன், மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.