“எங்களுக்கு நீதி வேண்டும்!”… பணக்காரப் பெண்ணின் அலட்சியத்தால் பலியான குழந்தை… நடுரோட்டில் கதறித் துடிக்கும் தாய்… கொந்தளிக்கும் மக்கள்…!!

By Gayathri on ஆவணி 31, 2026

Spread the love

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள செயின்ட் ஜான் பாப்டிஸ்ட் சாலையில், விளையாடிவிட்டு வீடு திரும்பிய அன்ஷ் குப்தா என்ற 8 வயது சிறுவன் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. 45 வயதான மேகா ராவல் என்ற ஊட்டச்சத்து நிபுணர், செல்போனில் பேசியபடியே கவனக்குறைவாகத் தனது எஸ்யூவி காரை ஓட்டி வந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார். காரின் சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்த அவனை, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், மருத்துவ பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாந்த்ரா காவல் துறையினர், விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, காரை ஓட்டி வந்த மேகாவைக் கைது செய்தனர். தங்களின் ஒரே மகனைப் பறிகொடுத்துவிட்டு, இனி தங்களை ‘அம்மா, அப்பா’ என அழைக்க யாருமில்லையே என அந்தப் பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது. எந்தத் தவறும் செய்யாமல் சாலையில் நடந்து சென்ற தங்கள் மகனின் அகால மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சிறுவனின் தந்தை அர்விந்த் குப்தா கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.