ஐயோ… என்ன கொடுமை இது… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் RIP … கணவன், மனைவி, குழந்தைகள் நால்வர் பரிதாப பலி… விசாகப்பட்டினத்தில் உலுக்கிய கோரச் சம்பவம்…!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

விசாகப்பட்டினம் மாவட்டம் சிந்தல அக்ரகாரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்ல பிரவீன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பிரவீன் ஆட்டோ ஓட்டுநராகவும், அவரது மனைவி காய்கறி வியாபாரமும் செய்து வந்துள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ‘ஆர்.ஐ.பி’ என்று பதிவிட்டுள்ளனர். இதைக் கண்ட உறவினர் ஒருவர் உடனடியாக பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

   

இதற்கிடையே, தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த முடிவிற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.