பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வில் முழு வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதாக தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமாரின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ள டிரான்ஸ்ஃபர் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த அவர், திடீரென திருவல்லிக்கேணி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஒரே பள்ளியில் அவருக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் டிரான்ஸ்ஃபர் வழங்கப்பட்டிருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளுக்கு அப்பாற்பட்டு, அதிகாரப் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள இந்த புகார், அரசின் வெளிப்படைத்தன்மை குறித்த உரிமைக்கோரல்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி, அரசியல் மற்றும் ஆசிரியர் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
