“என்னை காப்பாத்துங்க!”… பிரசவ அறையில் கதறிய கர்ப்பிணி… அடுத்த 10-வது நிமிடம் நடந்த கொடூரம்… மருத்துவமனையில் அரங்கேறிய மனிதநேயமற்ற கொடுமை…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

பிரசவ அறையில் கடுமையான வலியால் துடித்த கல்பனா, தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கதறி அழுத நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தங்களுக்கு இருந்த ஒரே மகளின் திருமணத்திற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்று திருமணம் செய்து வைத்ததாக அவளது பெற்றோர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்குள் கல்பனாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல், அவர் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டதாக குடும்பத்தினர் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நேரத்தில், அங்குள்ள மருத்துவர் 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும், அதனைத் தர முடியாத காரணத்தால் மருத்துவருக்குப் பதிலாக செவிலியர்களே அறுவை சிகிச்சை செய்ததே தங்களது மகளின் மரணத்திற்குக் காரணம் என்றும் உறவினர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தற்போது இரண்டு செவிலியர்கள் மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் முக்கிய மருத்துவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.