“தலையில் 23 தையல்கள்… அலறிய கர்ப்பிணி காவலர்”…. காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து இரத்த வெள்ளத்தில் மிதித்த போதை ஆசாமி…. அதிகாலை 4 மணிக்கு அலறிய பெங்களூரு….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஷில்பா என்ற கர்ப்பிணி பெண் காவலர் மீது, வாலிபர் ஒருவர் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அதிகாலை 4 மணியளவில், கஜேந்திரா என்ற வாலிபர் தனது செல்போன் காணாமல் போனதாகப் புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வேறு காவலர்கள் யாரும் இல்லாததால், காலையில் மூத்த அதிகாரிகள் பணிக்கு வந்ததும் புகார் அளிக்குமாறு ஷில்பா அவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரா வெளியே சென்று, சிறிது நேரத்தில் ஒரு இரும்புக் கம்பியுடன் மீண்டும் காவல் நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில், அவர் ஷில்பாவின் தலையில் இரும்புக் கம்பியால் 7 முதல் 8 முறை சரமாரியாகத் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ஷில்பாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக காவலர்கள், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே, ஒரு கர்ப்பிணி பெண் காவலர் மீது நடத்தப்பட்ட இந்த துணிச்சலான தாக்குதல் குறித்து பெங்களூரு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட கஜேந்திராவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.