விஜய்க்கு வந்த அதே ரூட்?…. தொகுதிக்கு 20,000 உறுப்பினர்கள்… தனுஷின் ரகசிய அரசியல் ஸ்கெட்ச்…. பரபரப்பில் கோடம்பாக்கம்….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உலா வரும் தனுஷ், தனது திரைப்பயணத்தின் 25-வது ஆண்டை அடுத்த ஆண்டு எட்டவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியிருப்பது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக கோவையில் தொடங்கப்பட்ட இந்த முகாமில் தொகுதிக்கு சுமார் 20,000 உறுப்பினர்கள் வரை இணைந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதும், இதன் உச்சக்கட்டமாக வெள்ளிவிழா ஆண்டை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருப்பதும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, தற்போது “தமிழக வெற்றி கழகம்” என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்து வரும் வேளையில், தனுஷின் இந்தத் திட்டமிட்ட நற்பணி மன்ற விரிவாக்கமும் அதே பாணியில் அமைந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. சினிமாவில் சர்வதேச அளவில் தடம்பதித்து தன் திறமையை நிரூபித்த தனுஷ், விஜய் போல மக்கள் ஆதரவைப் பெற்று களத்தில் ஜொலிப்பாரா என்பதை அவரது அடுத்தகட்ட நகர்வுகளும், அமைக்கும் மக்கள் இயக்கத்தின் சமூகப் பங்களிப்புமே தீர்மானிக்கும்.