பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தின் சந்தை மதிப்பு மளமளவெனச் சரிந்து முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட் எதிர்பார்ப்பு காரணமாக ஏக்கருக்கு ரூ.12 லட்சமாக இருந்த நிலத்தின் விலை குறுகிய காலத்திலேயே ரூ.35 லட்சம் வரை எகிறியது.
ஆனால், தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதால் நிலத்தின் மதிப்பு 50% வரை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்ற நோக்கில் அவசர அவசரமாக அதிக விலைக்கு நிலங்களை வாங்கி குவித்த பலரும், தற்போது தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.
