பந்து வீசிய நொடியில் நடந்த விபரீதம்… கிரிக்கெட் மைதானத்தில் சுருண்டு விழுந்த வாலிபர்…. விழுப்புரத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (40). இவர் இன்று காலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அஜிஸ்கான் பந்துவீச்சில் ஈடுபடும் போது திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலியின் தீவிரத்தால் நிலைகுலைந்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சக வீரர்களின் கண்முன்னே மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் துடிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தபோதே வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சாலாமேடு பகுதியில் பெரும் சோகத்தையும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே ஆராத வடுவையும் ஏற்படுத்தியுள்ளது.