“என்னால் எந்த வேலையும் செய்ய முடியல”…. உச்சகட்ட கடுப்பில் அமைச்சர் ஆனந்த்… தலைமைச் செயலகத்தில் வெடித்த மோதல்….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

தமிழக நீர்வளத்துறையில் கூடுதல் பொறுப்பு வகித்து வரும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பிரசாந்த் வடநரேவின் செயல்பாடுகள் குறித்துத் துறையின் மூத்த அதிகாரிகளிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில் அவர் மிகுந்த அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதுமட்டுமன்றி, நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் பொதுமக்களுக்கான நல்ல திட்டங்களையும் பணிகளையும் மேற்கொள்ள முற்படும்போதெல்லாம், துறைச் செயலாளர் பல்வேறு காரணங்களைக் கூறி அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. கூடுதல் பொறுப்பில் இருக்கும் செயலாளரின் இந்த முட்டுக்கட்டை மற்றும் இழுபறி நடவடிக்கைகளால், பல பயனுள்ள நலத்திட்டங்களைக்கூட செயல்படுத்த முடியாமல் அமைச்சர் புலம்பி வருவதாகவும், இதனால் துறை பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.