“மதுரையில் உங்க அதிகார செல்லாது”…. அமைச்சர் CTR நிர்மல் குமாருக்கு TVK MLA-க்கள் அதிரடி செக்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிர்மல் குமாருக்கும் அந்த மாவட்ட எம்.எல்.ஏ-க்களான கல்லாணை, தங்கப்பாண்டி  உள்ளிட்டோருக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல் நிலவி வருவதாகக் கூறப்படும் சூழலில், கட்சி மற்றும் அரசு சார்ந்த விழா பேனர்களில் அமைச்சரின் படத்தை விட தங்களது தொகுதி முக்கியத்துவத்திற்கே முன்னுரிமை தர வேண்டும் என எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் வலியுறுத்தப்படுவதாகக் தகவல்கள் கசிகின்றன.

மதுரை அரசியலில் தங்களின் அடிமட்ட இயக்கப் பணிகளையும், தொகுதியில் உள்ள அதிகார வரம்பையும் சுட்டிக்காட்டி எம்.எல்.ஏ-க்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து விரைவுபடுத்துவதையே தாம் முதன்மையாகச் செய்வதாக அமைச்சர் தரப்பு கருதுவதால், மதுரையின் ஆளுங்கட்சி வட்டாரத்தில் இந்த உட்கட்சிப் பூசல் பேசுபொருளாக மாறியுள்ளது.