உஷார் மக்களே!… நீங்களும் ஏமாந்துட்டீங்களா?… 2026-ன் மிகப்பெரிய ஸ்கேம்… இன்ஸ்டாகிராம் வழியே 8.5 கோடி அபேஸ்… நெட்டிசன்களை அலறவிட்ட மோசடி…!!

By Gayathri on ஆவணி 26, 2026

Spread the love

சமீபத்தில் “25 ஆகஸ்ட் 2026” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்டமான ரகசியம் வெளியாகப் போவதாக கூறி, அந்த கணக்கு மக்களிடையே மிகுந்த ஆவலைத் தூண்டியது. இந்த ரகசியம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில், குறுகிய காலத்திலேயே சுமார் 4 லட்சம் பேர் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரத் தொடங்கினர். எந்தவொரு தெளிவான தகவலும் இல்லாமல், வெறும் தேதியை மட்டுமே வைத்து மக்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தனர்.

இந்த அதீத ஆர்வத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த கணக்கின் உரிமையாளர், குறிப்பிட்ட அந்த நாளான ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு டெலிகிராம் இணைப்பைப் பகிர்ந்தார். அந்த ரகசிய உள்ளடக்கத்தைக் காண வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்பட்டது. மக்களின் எல்லையற்ற ஆவலின் காரணமாக, சுமார் ஒரு லட்சம் பேர் இந்தத் தொகையைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த மர்ம நபர் சுலபமாக 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

   

பணத்தைச் செலுத்திவிட்டு, ஏதோ பெரிய ரகசியம் வெளிவரப் போகிறது என்று காத்திருந்தவர்களுக்கு இறுதியில் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. அந்த இணைப்பில் எந்த ரகசியமும் இல்லை; மாறாக, ‘காலையில் சீக்கிரம் எழுந்திருங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள்’ என்று அறிவுரை கூறும் ஒரு சாதாரண ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோட்டிவேஷனல் வீடியோ மட்டுமே இருந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களது பணத்தை இழந்துவிட்டதாக புலம்பி வரும் நிலையில், இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை என்று சிலர் சாடுகின்றனர். ஆனால் வேறு சிலரோ, மக்களின் ஆர்வத்தை பணமாக மாற்றிய இது ஒரு “புத்திசாலித்தனமான வியாபார தந்திரம்” என்று கூறி இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.