விடிந்ததும் நடந்த பயங்கரம்..! சொத்துக்காக இவ்வளவு வெறியா?… கொழுந்தனை அடித்துக் கொன்ற அண்ணி… போலீஸ் வலைவீச்சு…!!

By Gayathri on ஆவணி 26, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த நதியாவுக்கும், அவரது கணவரின் சகோதரரான 66 வயதுடைய பாலகிருஷ்ணனுக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த நதியா, சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்து பாலகிருஷ்ணனை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

கொழுந்தன் உயிரிழந்ததைக் கண்ட நதியா உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த ஆரல்வாய்மொழி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய நதியாவைக் கைது செய்வதற்காகத் தனிப்படை அமைத்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சொத்துத் தகராறில் நடந்த இந்த குடும்பக் கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.