பட்டாசு புகையால் ஆத்திரமடைந்து அசம்பாவிதம்…! “விநாயகர் ஊர்வலத்தில் முட்டை வீசிய நபர்…” மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பய்குல்லா பகுதியில் ஆகஸ்ட் 23 அன்று ‘மஜ்காவோஞ்சா மோரியா கணபதி மண்டல்’ சார்பாக விநாயகர் சிலை வருகைக்கான ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராம்பாவு போகலே மார்க் வழியே சென்றபோது, கட்டிடம் ஒன்றில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஊர்வலத்தின் மீது முட்டைகளை வீசியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்துப் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த பய்குல்லா பொலிஸார், 5 தனிப்படைகளை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தினர்.

தொழிற்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில், முட்டை விநியோக வேலை செய்து வரும் டானிஷ் ஷெர் கான் (22) என்பவரைக் கண்டறிந்து 36 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகையால் ஆத்திரமடைந்து, ஆன்லைன் டெலிவரிக்காக வைத்திருந்த முட்டைகளை அவர் வீசியதாகப் போலீசார் தெரிவித்தனர். மும்பை பொலிஸ் கமிஷனர் தேவன் பாரதியின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.