டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து விழுந்து குஷி (20) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணத்திற்குப் பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரே மாடியில் இருந்து குதிக்கவில்லை, வரதட்சணைக் கொடுமையால் அவர்களே மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து அறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், சம்பந்தப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
